80 விமானிகளை சம்பளம் இல்லாத 3 மாத கட்டாய விடுப்பில் அனுப்பி வைத்துள்ளது ஸ்பைஸ் ஜெட் விமானப் போக்குவரத்து நிறுவனம்.!

0 2624

ஸ்பைஸ் ஜெட் விமானப் போக்குவரத்து நிறுவனம் சுமார் 80 விமானிகளை சம்பளம் இல்லாத 3 மாத கட்டாய விடுப்பில் அனுப்பி வைத்துள்ளது.

தற்போது அந்த நிறுவனம் இதுவரை 50 விமானங்களுடன் தினசரி 300 பயணங்களை மேற்கொண்டு வருகிறது. அந்நிறுவனம் 800 பைலட்டுகளையும் பணியில் வைத்துள்ளது.பல மாதங்களாக பி.எப். போன்ற வசதிகளும் வருமான வரிக்கான படிவம் 16ம் ஸ்பைஸ் ஜெட் ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

விமானக் கட்டணங்கள் உயர்ந்துள்ள நிலையில் லாபகரமான முறையில் விமானங்களை இயக்குவதற்கான தற்காலிக நடவடிக்கை இது என்று அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments